பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். யானை வழிபட்டு முக்திப் பெற்ற ஸ்தலம் என்பதால் 'திரு ஆனைக்கா' என்று அழைக்கப்படுகிறது.
இதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள யானையை வணங்காமல் செல்வது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் யானை அகிலா முக்கிய பங்காற்றுகிறது. உற்சவங்களில் முன் செல்கிறது. ஒவ்வொரு கால பூஜையின் போதும், யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கடந்த, 2002ம் ஆண்டு பிறந்த அகிலா யானை, 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. கோயிலின் செல்லப்பிள்ளையாக விளங்கும் அகிலாவிற்கு, 21வது பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க... மதிமுகவின் முதன்மைச் செயலாளர் ஆகிறார் துரை வைகோ...?
அலங்கரித்து அழைத்து வரப்பட்ட யானை அகிலாவிற்கு, கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் கஜபூஜை நடத்தப்பட்டது. கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், யானை பாகன்கள் ஜெம்புநாதன், அச்சுதன், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடினர்.
அதன்பின்னர், அகிலாவிற்கு பிடித்த பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர்.
பக்தர்கள் அன்பினால் நெகிழ்ந்து போன யானை அகிலா, தனது தும்பிக்கையை உயர்த்தி, பிளிறியபடி தனது நன்றியைத் தெரிவித்தது. அதைக்கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.