Home /trichy /

Trichy : திருச்சியில் இன்று (ஜூன் 28) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்..

Trichy : திருச்சியில் இன்று (ஜூன் 28) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்..

திருச்சி

திருச்சி

Trichy District : திருச்சி மாவட்டத்தில் இன்று (ஜூன் 28)ஒருநாள் துவாக்குடி பகுதியில் மின் நிறுத்தம்.

திருச்சியில் துவாக்குடி கோட்ட பகுதியில் இன்று (ஜூன் 28) மின் தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் கிழக்கு கோட்டம் துவாக்குடி கோட்டம் துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று  (28 ம் தேதி) காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

துவாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகள் நேரு நகர் அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், M.D.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் C- செக்டார் மற்றும் A, E, R & PH செக்டார், தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர்,தேவராயனேரி, பொய்கைகுடி ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி