ஹோம் /திருச்சி /

தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் காங்கிரஸ்  கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் காங்கிரஸ்  கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

X
திருச்சியில்

திருச்சியில் காங்கிரஸ் ஆர்பாட்டம்

Trichy Congress Protest | திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் காட்சியினர் ஆர்பாட்டம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற  வலியுறுத்தி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் ஆண்டு அறிக்கையை புறக்கணித்து பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயரை சொல்லாமல் அவமதிப்பு செய்த ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை அவமதித்த ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி,காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Trichy