முகப்பு /திருச்சி /

திருச்சியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர்!

திருச்சியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர்!

X
அரசு

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

Trichy News| பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை செய்திட வேண்டும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் 2000 மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    First published:

    Tags: Local News, Trichy