முகப்பு /திருச்சி /

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்.. திருச்சியில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்.. திருச்சியில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

X
திருச்சியில்

திருச்சியில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Trichy protest | திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த நபர்களை கைது செய்யக்கோரி இந்திய குடியரசு கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு சார்பு உதவிகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Protest, Trichy