முகப்பு /திருச்சி /

காவிரி பாலம் விரைவில் திறப்பு.. பெருமூச்சு விட்ட திருச்சி மக்கள்..

காவிரி பாலம் விரைவில் திறப்பு.. பெருமூச்சு விட்ட திருச்சி மக்கள்..

X
திருச்சி

திருச்சி காவேரி பாலம் திறக்கப்படுகிறதா?

Trichy News : திருச்சி மக்களின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும் அரசு அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976ம் சாலைக்கு இணையான பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 541.46 மீட்டர் சாலையின் அகலம் 15 மீட்டர், நடை பாதையின் அகலம் 2.05 மீட்டர், 16 தூண்கள் கொண்டதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் ஒரு பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதிய தார் சாலை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள கடந்த செப்டம்பரில் கனரக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பணிகள் துவங்கின. பின்னர் இரு சக்கர வாகன போக்குவரத்தும் நவம்பர் 21ம் தேதி தடை செய்யப்பட்டது. வாகனங்கள் கும்பகோணத்தான் சாலை, ஓடத்துறை பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே பாலத்தில் பேரிங்குகள் மாற்றப்பட்டு, இணைப்பு பகுதிகளும் புதிததாக அமைக்கப்பட்டுள்ளன. பழைய தார் சாலை இயந்திரம் மூலம் அகற்றி புதிய தார் சாலை அமைக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நடைபாலம் சீரமைத்தல் பெயின்டிங் பணி, பணிகள் நடந்து வருகிறது. திருச்சி காவிரி பாலம் சில நாட்களில் திறக்கப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்த நிலையில், பாலத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4 மாதங்களாக 500 மீட்டர் கடக்க 6 கி.மீ சுற்றி வந்த மக்கள் இதனால் நிம்மதியடைந்துள்ளனர்.

First published:

Tags: Local News, Trichy