முகப்பு /திருச்சி /

தமிழ்நாடு பட்ஜெட் 2023 : திருச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் இவைதான்!

தமிழ்நாடு பட்ஜெட் 2023 : திருச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் இவைதான்!

X
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2023

Trichy News | தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பயிற்சி அரங்கம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழ்நாடு அரசு 2023 பட்ஜெட்டில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்பொழுது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த வகையில் விளையாட்டுத்துறைக்கு பட்ஜெட் எதிர்பார்ப்புகள் நிறையவே உள்ளது. மாணவர்களை தங்களது பள்ளி படிப்பில் இருந்து அவர்களை ஊக்குவிக்க சரியான பயிற்சியாளர் மற்றும் பயிற்சி அரங்கம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தரநிதி ஒதுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Local News, TN Budget 2023, Trichy