முகப்பு /திருச்சி /

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருச்சி மாவட்டத்தில் 92.77% பேர் தேர்ச்சி.. முழு விவரம்

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருச்சி மாவட்டத்தில் 92.77% பேர் தேர்ச்சி.. முழு விவரம்

மாதிரி படம்

மாதிரி படம்

Trichy District 11th Results 2023 |11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை தெரிந்து கொள்வோம்..

  • Last Updated :
  • Tiruchirappalli, India

10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு வெளியான நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. 2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இதில் திருச்சி மாவட்ட தேர்வு முடிவுகளின் விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்..

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 30,290 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 92.77% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மொத்தம் 12,159 ஆண் மாணவர்களும், 15,941 மாணவிகளும் +1 தேர்வு எழுதினர். இதில் 12,159 மாணவர்களும், 15,941 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண் மாணவர்கள் 88.14%, மாணவிகள் 96.64% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tamil Nadu 11th Result Direct link : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது

தேர்வு முடிவுகளை மாணவர்கள்  www.tnresults.nic.in,   www.dge.tn.nic.in  , ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

துணைத் தேர்வு தேதிகள்

மேலும் 11ஆம் வகுப்பு துணை தேர்வு ஜுன் 27 முதல் ஜூலை 5 வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களை பெற வேண்டிய தேதிகள்

பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 26 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் விண்ணப்பிக்க விரும்பும் 11 ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிகள் வாயிலாக வரும் 24 முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைத் தேர்வு விண்ணப்பிக்க வேண்டிய தேதி

top videos

    பத்து மற்றும் பதினோராம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத வரும் 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: 11th Exam, Exam results, Local News, Trichy