ஹோம் /திருச்சி /

இனிப்பும் ஆரோக்கியமும் நிறைந்த பழ அல்வா - திருச்சி மக்களின் ஃபேவரைட் இதுதான்..

இனிப்பும் ஆரோக்கியமும் நிறைந்த பழ அல்வா - திருச்சி மக்களின் ஃபேவரைட் இதுதான்..

X
அல்வா

அல்வா கடை

Trichy | திருச்சியில் பழங்களைக் கொண்டு தயாரிக்கும் அல்வா மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கடையில் பழங்களை கொண்டு விதவிதமான அல்வாக்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அல்வா‌

அல்வா என்றால் நம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் பெரிய அளவில் கிடைப்பதில்லை. நாவை மட்டும் திருப்திபடுத்தும் அல்வாக்கள் இப்போது உடலுக்கு நன்மை அளிக்கும் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தானே.

திருச்சியை பொருத்தவரை டீக்கடை என்றால் அது நாகநாதர் டீ ஸ்டால் தான். திருச்சி மாநகர பகுதியில் எங்கு திரும்பினாலும் இந்த டீ கடையை பார்க்கலாம்.

கோதுமை மாவு போன்ற பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு அல்வா செய்து வந்த நிலையில் தற்போது இவர்கள் அதை மாற்றி விதவிதமான பழங்களை கொண்டு அல்வா செய்து அசத்தி வருகின்றனர்.

உறையூரில் துணிக்கடையில் திடீர் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

கேரட், திராட்சை, முந்திரி, வாழை, மாதுளை ஆகிய பழங்களை வைத்து அல்வா தயாரித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். வரும் வாடிக்கையாளர்கள் எல்லாமே அல்வாவில் இத்தனை வெரைட்டி செய்ய முடியுமா? அப்படின்னு ஆச்சரியப்பட்டு போறாங்க. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வர்றவங்க மறக்காம இந்த கடையை விசிட் பண்ணிட்டு போங்க.

செய்தியாளர்: மணிகண்டன், திருச்சி.

First published:

Tags: Local News, Trichy