முகப்பு /திருச்சி /

திருச்சி மாணவர்களுடன் சேர்ந்து கரகாட்டம் ஆடிய ஸ்வீடன் நாட்டினர்..

திருச்சி மாணவர்களுடன் சேர்ந்து கரகாட்டம் ஆடிய ஸ்வீடன் நாட்டினர்..

X
கரகாட்டம்

கரகாட்டம் ஆடிய ஸ்வீடன் நாட்டினர்

Trichy News | திருச்சி மண்ணச்சநல்லூர் பள்ளி மாணவர்களுடன் கரகம் ஆடி அசத்திய ஸ்வீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குநமது நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக மாணவர்கள் வந்திருந்தனர்.

சிறுகாம்பூர்பள்ளியின்பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்,நெறிமுறைகள், பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள்,மாணவர்கள் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என சுவீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டனர். முதலில் குத்து விளக்கேற்றி பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் குடிலில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதனைத்தொடர்ந்து நமது கலாச்சார கலை நிகழ்ச்சிகளான சிலம்பம் கரகம், நாட்டுப்புறப்பாட்டு, தற்காப்பு கலை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சென்னையைச் சேர்ந்த இரட்டையர்கள் சர்வதேச இளம் எக்ஸ்னோரா மாணவர்களின் தூதுவர் மாஸ்டர் ஹர்பித், செல்வி ஹர்பிதா மாணவ மாணவிகளுக்கு உத்வேகம் தரும் வகையில் உரையாற்றினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்தநிகழ்வில் சிறுகாம்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ், சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட், துணை முதல்வர் கரிண் ஹோல்சன்,சர்வதேச இளம் குழந்தைகள் சமூக நல அமைப்பின் நிறுவனர் மோகன் ,ஸ்வீடன் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் நந்தலாலா, சந்தானம், சங்கரி , சிறுகாம்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் சுவீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Trichy