ஹோம் /திருச்சி /

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்!

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்!

X
சீறிப்பாய்ந்த

சீறிப்பாய்ந்த காளை.

Suriyur Jallikattu | திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடம் சூரியூர் கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தில் தமிழர்களின் மரபை பறைசாற்றும் வகையில் ஜல்லிகட்டு போட்டி தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடம் சூரியூர் கிராமம் ஆகும். இங்கு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். சூரியூர் கிராமம் முழுவதும் விழாகோலாமாக காட்சியளிக்கும்.

திருவெறும்பூர் அடுத்துள்ளது சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும்.அந்த வகையில் இன்று சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில்வாடிவாசல் திறக்கபட்டு காளைகள் சீறிபாய்ந்தது. இந்த ஜல்லிகட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 610 காளைகள், 314 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் மொபட், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

First published:

Tags: Jallikattu, Local News, Trichy