திருச்சி மாவட்டத்தில் கோடைக் காலம் துவங்கி கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கோடை மழை மற்றும் அதைத்தொடர்ந்து கோடை வெயில் என்று மாறி மாறி வரும் வித்தியாசமான கால நிலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை 8 மணி வரை, 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்மலையில் 19.8 மில்லி மீட்டரும், விமான நிலையத்தில் 16.2 மி.மீ., ரயில் நிலையப் பகுதியில், 9 மி.மீ., மாநகரில் 10 மில்லி மீட்டர் என மொத்தம் 98.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி இருந்தது.
அதேபோல, நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை மீண்டும் மழை விட்டு விட்டு பெய்தது. அதிகபட்சமாக நந்தியார் தலைப்பில், 125.4 மி மீ, புள்ளம்பாடியில், 88 மி.மீ., துறையூரில், 70 மி.மீ என மொத்தம் 652.2 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது.
துறையூரில் கொட்டித் தீர்த்த மழையினால் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சுற்றுலாத் தலமான புளியஞ்சோலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று பெய்த கன மழையால் துறையூர் அடுத்த புளியஞ்சோலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோடைக் காலம் என்பதால் புளியஞ்சோலை சுற்றுலா தளத்திற்கு பல்வேறு மாவட்டத்திலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டு முழுவதும் புளியஞ்சோலை ஆற்றில் சீரான வேகத்தில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும்.
இந்நிலையில், நேற்று இரவு கொல்லிமலை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததின் காரணமாக, தற்போது சுற்றுலாத் தலமான புளியஞ்சோலை ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
புளியஞ்சோலை ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் காரணமாக பச்சபெருமாள் பட்டி மற்றும் ஆழத்துடையான்பட்டி கிராம ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy Rainfall, Trichy