முகப்பு /திருச்சி /

கொளுத்தும் கோடை வெயில்.. திருச்சியில் குறையும் வெப்பம்! இன்றைய வானிலை நிலவரம்!

கொளுத்தும் கோடை வெயில்.. திருச்சியில் குறையும் வெப்பம்! இன்றைய வானிலை நிலவரம்!

X
அதிகரிக்கும்

அதிகரிக்கும் வெப்பம்

Trichy weather Update கடந்த சில நாட்களாக வெயில் சதம் அடித்து வந்த நிலையில்  திருச்சியில் 100 டிகிரிக்கு குறைவாக வெப்பம் பதிவாகி உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் தொடங்கினாலும், கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சியில் கடந்த சில நாட்களாகவே வெயில் தொடர்ந்து 100 டிகிரிக்கும் அதிகமாகவே காணப்படுகிறது.

கடந்த மே மாதம் வெயில் உச்சத்தை தொட்டது. இதற்கு முந்தைய கோடைகளை விட இம்முறை அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மே மாதம் முடிந்துவிட்ட நிலையில், சென்ற மாதத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது ஜூன் மாதம். கடந்த மாதம் இறுதியில் திருச்சியில் அவ்வப்போது மழை பெய்து குளிரூட்டிய நிலையில், இந்த ஜூனில் அதுவும் குறைந்து உள்ளது. திருச்சியில் அக்னி வெயில் முடிந்த பின்பும் கோர தாண்டவம் ஆடி வந்த வெயில் சற்று குறைந்து காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக திருச்சியில் 103 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது. ஜூன் 9ஆம் தேதி வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி 100 டிகிரிக்கு குறைவான வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் ஜூன் 10 அன்று வெப்பநிலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Summer Heat, Trichy