திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு பின்புறம் உள்ள ஜான் வெஸ்டி பள்ளி வளாகத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி ஏப்ரல் 19ம் தேதி வெகு விமர்சையாக தொடங்கியது.
தொடங்கிய நாள் முதல் தினமும் நூற்றுக்கணக்கில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இத்தனை நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கும் விஷயத்தை பற்றி உங்களுக்கு தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறதா? நமக்கு தான் நேரம் இருக்கிறதே. இன்னமும் செல்லலாம். ஏனெனில் இந்த பொருட்காட்சி மே 30ம் தேதி தான் நிறைவு பெறுகிறது.
டிக்கெட் :டிக்கெட்டுகளை நேரடியாக அந்த இடத்தில் வாங்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டால்கள், விளையாட்டுகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளையும் மக்கள் அந்தந்த இடங்களில் நேரடியாக வாங்கலாம். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 70 ரூபாயும் குழந்தைகளுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அம்சங்கள் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட ஸ்நோ வேர்ல்ட், ஜியான்ட் வீல், ரேஞ்சர், கிராஸ் வீல், கொலம்பஸ், பேய் வீடு 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. உணவு வகைகளை பொருத்தவரை டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, அல்வா, மீன் வருவல் போன்ற வகை வகையான திண்பண்டங்களையும் உண்டு மகிழலாம்.
அது மட்டுமின்றி பானி பூரி, பஞ்சு மிட்டாய், குல்பி, ஐஸ்கிரீம், ஜீஸ், கான் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன. பொருட்காட்சி ஸ்டால்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பல்வேறு வகையான புத்தகங்கள் அடங்கிய ஸ்டால்கள், காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊறுகாய் வகைகள், சிறு சிறு விளையாட்டுகள் கொண்ட ஸ்டால்கள் என பல வகையான கடைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், 3டி முறையில் புகைப்படம் எடுக்கும் விதமாக பல புகைப்பட சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து மக்கள் கருத்து கூறுகையில், “இந்த பொருட்காட்சி கோடை விடுமுறையை கழிக்கும் விதமாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விளையாட்டுகள் இருப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாட்டிக் கொண்டிருக்கின்றனர். செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளையும் அவற்றின் ஒலியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டு கழிக்கின்றனர்” என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy