Home /trichy /

பழம்பெருமை பேசும் சுமை தாங்கி கல் மேடை.. வயலூர் சாலையில் சென்றால் இதை பார்க்கலாம்..

பழம்பெருமை பேசும் சுமை தாங்கி கல் மேடை.. வயலூர் சாலையில் சென்றால் இதை பார்க்கலாம்..

திருச்சி

திருச்சி - சுமை தாங்கி கல் மேடை..

Trichy Latest News : திருச்சி வயலூர் சாலை சோமரசம்பேட்டை அருகே அழிந்து வரும் சுமை தாங்கி கல்மேடையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
 

கிராமப்புறங்களில் அதுவும் சாலையோரமாக அமைந்திருக்கும் சுமைதாங்கி கல் மேடை. இன்றைய இளைய தலைமுறையினர் “சுமைதாங்கி கல், சுமைதாங்கி கல் மேடை, அப்படினா என்ன?” என்று கூறும் அளவிற்கு தற்போது நிலை உள்ளது .

கருவுற்ற பின்னர் வயிற்றில் குழந்தையுடன் இறந்துபோன ஒரு பெண்ணின் துயரம், சுமைதாங்கி கல் மேடை மீது துன்பச் சுமையாக அந்தக் குடும்பத்தினரால் இறக்கி வைக்கப்பட்டிருக்கும்.        கிராமங்களில் இந்த வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒரு வீட்டில் பெண் கருவுற்று குழந்தை பிறப்பதற்கு முன்பாக வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் இறந்துவிட்டால், அதன் நினைவாக அந்த ஊருக்கு வெளியே ரோட்டோரமாக சுமைதாங்கி கல் மேடை அமைப்பது வழக்கம்.

சுமைதாங்கி கல் மேடை


அந்தச் சுமைதாங்கி கல் மேடை அந்தப் பெண்ணின் நினைவாக மட்டும் இல்லை .தற்போது இருப்பதுபோல பஸ், லோடு ஆட்டோ, டூவீலர் போன்ற வாகனங்கள் அதிக அளவு அந்த காலத்தில் இல்லை.

சுமை

கிராமத்து மக்கள் தங்கள் விளைபொருட்களைத் தலைச் சுமையாகத்தான் அங்கிருந்து நகரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்று வந்தாக வேண்டும். அவ்வாறு சுமைகளை தலையில் தூக்கிச் செல்பவர்கள், ரோட்டோரமாகத் தென்படுகின்ற சுமைதாங்கி கல் மேடையில் தலைச்சுமையினை இறக்கிவைத்து, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துப் பின்னர் தங்களது சுமைகளை மீண்டும் தூக்கிச் செல்வார்கள்.

சோம்பரசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுமை தாங்கி கல்மேடை.


திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களில் இன்னும் சுமைதாங்கி கல்மேடை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படி ஒரு கல் மேடை தான் திருச்சி மாவட்டம் வயலூர் செல்லும் வழியாக சோம்பரசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுமை தாங்கி கல்மேடை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தரையில் இருந்து 4 அடி உயரத்துக்கு இரண்டு கல் தூண்கள். ஒன்றரை அடி அகலம் 6 அடி நீள கல் பலகை ஒன்று அந்த இரு தூண்கள் மீதாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு சுமைதாங்கி கல் மேடையின் அமைப்பு இதுதான். காலப்போக்கில் இன்றைய நடைமுறையில் இதுபோல சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது.  நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற எச்சத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Somarasampettai
சோமரசம்பேட்டை
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி