ஹோம் /திருச்சி /

மீண்டும் மிரட்டும் கொரோனா... திருச்சியில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்...

மீண்டும் மிரட்டும் கொரோனா... திருச்சியில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்...

X
திருச்சி

திருச்சி

Trichy News : மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று திருச்சியில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

சீனாவில் `பி.எப்.7' என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதேபோல் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தொற்று பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

இதனால் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 125 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்.. முதலமைச்சர் அதிரடி பேச்சு!

அந்த வார்டுக்கான டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு போதுமான அனைத்து வசதிகளும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் உள்ளது.

50 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 50 சாதாரண படுக்கைகள், 25 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என்று மொத்தம் 125 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை கண்காணித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர்கள் என 250 பேர் தயார் நிலையில் உள்ளனர். அத்துடன் 350 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் தயார் நிலையில் உள்ளன. 3 ஆக்சிஜன் உற்பத்தி மையமும் செயல்பாட்டில் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: Corona, Local News, Trichy