முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்தபோது, அங்கு பொதுமக்கள் திரண்டு இருந்த பகுதியில் நின்ற 7 வயது சிறுமி திடீரென 'ஸ்டாலின் அங்கிள்'... 'என்னை படிக்க வையுங்கள்' என்று சத்தம்போட்டு அழைத்தார். அதற்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டார். இதற்கிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்த சிறுமியிடம் விசாரித்தார்.
அப்போது அவர் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால் தன்னால் படிக்க முடியாத சூழல் இருப்பதாகவும், அதனால் தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து அவரை படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
அந்த சிறுமியின் பெயர் காவ்யா. இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தாய் கவிதா, சகோதரர் கவின்குமார் ஆகியோருடன் திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். காவ்யாவின் தந்தை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் என்றும், கடந்த 1 வருடத்துக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க... டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதன்பிறகு குடும்ப செலவுக்கு வழியில்லாமல் தவித்த கவிதாவும், அவரது 2 குழந்தைகளும் திருச்சிக்கு வந்து ஒருவார காலமாக உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். முதல்வர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். நடவடிக்கை இல்லை என்பதால், திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சரை கண்டதும், சிறுமி காவ்யா தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி சத்தம் போட்டு அழைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:சே.கோவிந்தராஜ். திருச்சி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK, Trichy