ஹோம் /திருச்சி /

திருச்சி : ஸ்ரீரங்கநாதர் தனது தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு கொடுத்த சீர்வரிசை என்ன தெரியுமா?

திருச்சி : ஸ்ரீரங்கநாதர் தனது தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு கொடுத்த சீர்வரிசை என்ன தெரியுமா?

X
ஸ்ரீரங்கநாதர்

ஸ்ரீரங்கநாதர் தங்கைக்கு கொடுத்த சீர்வரிசை

Trichy District News : ஸ்ரீரங்கநாதர் தனது தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், ஸ்ரீரங்கநாதரும் அகிலாண்டேஸ்வரியும் அண்ணன் தங்கை உறவுமுறை என்று கூறப்படுகிறது. தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு வருடம் தோறும் மார்கழி மாத பிறப்பன்று திருப்பாவாடை நிகழ்ச்சிக்காக பட்டுப்புடவை தங்க மாங்கல்யம் மற்றும் மங்களப் பொருட்கள் காய்கறிகள் அரிசி உள்ளிட்டவை சீர்வரிசையாக கொடுக்கப்படும்.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ரங்க விலாச மண்டபத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு கொடுக்கப்படும் சீர்வரிசை பொருட்களை பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் இருந்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் கோயில் பணியாளர்கள் ஆகியோர்கள் சீர்வரிசை பொருட்களை காரில் எடுத்து வந்தனர்.

இதையும் படிங்க : திருச்சி மாவட்ட மக்களே... நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? செக் பண்ணிக்கோங்க

அதன் பின்னர் திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் முன்பு திருவானைக்கோவில் யானை அகிலா மற்றும் கோயில் பணியாளர்கள் மங்கள வாத்தியங்களுடன் வான வேடிக்கைகளுடன் வரவேற்று ஊர்வலமாக சீர்வரிசை பல்கலை கொண்டு சென்றனர்.

அதனைத்தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சன்னதி முன்பு ஸ்ரீரங்கம் கோயில் இணையானையர் மாரிமுத்து திருவானைக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரனிடம் முறைப்படி வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வந்திருந்த அனைவரும் அகிலாண்டேஸ்வரி மற்றும் ஜம்பிகேஸ்வரர் வழிபட்டுச் சென்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்களப் பொருட்கள் திருப்பாவாடை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படவுள்ளது.

First published:

Tags: Local News, Trichy