ஹோம் /திருச்சி /

ஸ்ரீரங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் கொலு கோலாகலம்.!

ஸ்ரீரங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் கொலு கோலாகலம்.!

ஸ்ரீரங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார்

ஸ்ரீரங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான நாளை பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் குளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான நாளை பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் குளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்வை கண்டு காண ஏராளமான பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் உட்பட பரல் வந்திருந்தனர்.

பக்தர்களும் ஒருவருக்குகொருவர் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். இரவு 7.45 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெற்றது.

இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாளான 1-ந் தேதி மற்றும் 8-ம் திருநாளான 3-ந் தேதி ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.

இதையும் வாசிக்க: சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 2-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது.

விழாவின் 9-ம் நாளான 4-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Hindu Temple, Local News, Srirangam, Trichy