ஹோம் /திருச்சி /

மவுத் ஆர்கன் இசைத்தும் நடனமாடும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்...

மவுத் ஆர்கன் இசைத்தும் நடனமாடும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்...

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானை

Trichy Srirangam Temple Elephants Dance | ஸ்ரீரங்கத்து கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில் இக்கோவில் யானைகள் மவுத் ஆர்கன் இசைத்தும் நடனமாடியதும் பக்தர்களை  பரவசப்படுத்தும் வகையில் அமைந்தது.

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி  விழாவின் முதல் நாளான 26ம் தேதியன்று மாலை, ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பிரகாரங்களில் வலம்வந்து கொலுமண்டபம் வந்தடைந்தார், அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மங்கள ஆரத்தி எனப்படும் தீபாராதனை நடைபெற்றது.

மேலும் படிக்க:  சொந்த வீடு வாங்கவும், சொத்து பிரச்சினை நீங்கவும் திருச்சியில் வழிபட வேண்டிய கோவில்!

இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ரெங்கநாயகி தாயார் சன்னதியில் இரவு ஸ்ரீரங்கத்து கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கியது.

கோவில் யானைகளின் இத்தகைய வியத்தகு செயலை பெருந்திரளான பக்தர்கள்  வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 2-ம் தேதி நவராத்திரி 7ம் நாளில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய இயலும் தாயார் திருவடி சேவை நடைபெற உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy