முகப்பு /திருச்சி /

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

X
தைத்

தைத் திருவிழா

Tirchy | 108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு அறங்கா நகர் சுவாமி திருக்கோவிலில் தைதேர் திருவிழா.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழா வரும் பிப்ரவரி 5-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தை தேரோட்ட திருவிழாவின் முதல் நாளில் அதிகாலை 2.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார்.

பின்னர் அதிகாலை 3 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 5.30 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

தைத் திருவிழா பூஜை

நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திர வீதிகளிலும் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார்.

அங்கிருந்து இரவு 8.45க்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் (27-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

வெடிகுண்டை கண்டுபிடிக்க போய் கறிக்குழம்பை மோப்பம் பிடித்த நாய்.. டென்ஷன் ஆன திருச்சி போலீசார்..

தை தேர்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Trichy