முகப்பு /திருச்சி /

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவை நேரம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவை நேரம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவை நேரம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவை நேரம் அறிவிப்பு

TIRUCHIRAPALLI : 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாக இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவை நேரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருமலுக்கு உகந்த நாளாகிய புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்வது, அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதனால், இந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர்.

அன்படி, தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து வணங்கிச் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நம்பெருமாள் (ரங்கநாதர்) சேவை நேர விவரங்கள் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, புரட்டாசி சனிக்கிழமையான வருகிற 24ஆம் தேதி, அடுத்த மாதம் (அக்டோபர்) 1 ஆம் தேதி, 8ஆம் தேதி ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரையும் சேவை நேரம் ஆகும்.

இதையும் படிங்க : திருச்சியில் 3,000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி.. திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

இந்த நாட்களில் விஸ்வரூபம், பொதுஜன சேவை இல்லை. அதேபோல் பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரையும் பூஜா காலம் என்பதால் சேவை கிடையாது. மேலும் அடுத்த மாதம் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சேவை நேரம் ஆகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரையும் பூஜா காலம் என்பதால் சேவை இல்லை. மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை பூஜை காலம் மற்றும் புறப்பாடு நடைபெறும். மேற்கண்ட 4 சனிக்கிழமைகளிலும் விஸ்வரூபம் பொதுஜன சேவை இல்லை என்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tiruchirappalli S22p24