திருச்சியில் நடைபெற்ற சகஸ்ர தீபம் வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்று ஆயிரம் விளக்குகளால் ஸ்ரீரங்கம் கோபுரத்தை உருவாக்கினர்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சகஸ்ரதீப வைபவம் நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில் நடைபெறும் இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி இறைவனை வணங்கினால் மிகுந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் 3 நாட்களுக்கு சகஸ்ர தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெறும் . இந்த ஆண்டும் சகஸ்ரதீப வைபவம் மிகுந்த பக்தி பரவசத்துடன் ஏற்றப்பட்டது. அந்த வகையில் முதல் நாளான ரங்கநாயகி தாயார் சன்னதியில் ஏற்றப்பட்டது.
இதையும் படிங்க | திருச்சியில் வின்டேஜ் பொருட்கள் வணிகத்தில் கலக்கும் கேரள வியாபாரி!
இரண்டாம் நாள் சக்கரத்தாழ்வார் சன்னதி, மூன்றாம் நாள் நம்பெருமாள் சன்னதியில் ஏற்றப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆயிரத்திற்கு மேற்பட்ட விளக்குகளை அடுக்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மாதிரி உருவாக்கப்பட்டது. விளக்குகளோடு மட்டும் இல்லாமல் பூக்களை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டது. இதை காண்பதற்காகவே பக்தர்கள் வெகு தொலைவில் இருந்து வந்தனர். அழகாக ஆயிரக்கணக்கான விளக்குகள் எரிவது காண்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
செய்தியாளர்: மணிகண்டன், திருச்சி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Srirangam, Trichy