முகப்பு /திருச்சி /

தங்கை மாரியம்மனுக்கு சீர் வழங்கும் ஸ்ரீரங்கம் நம்பெருமான்.. அண்ணன் வழங்கிய புடவையில் ஜொளித்த சமயபுரம் மாரியம்மன்!

தங்கை மாரியம்மனுக்கு சீர் வழங்கும் ஸ்ரீரங்கம் நம்பெருமான்.. அண்ணன் வழங்கிய புடவையில் ஜொளித்த சமயபுரம் மாரியம்மன்!

X
சீர்

சீர் வழங்கும் வைபவம்.

Srirangam Festival | ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் சார்பில் வழங்கப்பட்ட சீர் வரிசைகளை அணிந்து சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில் தைத்திருநாள் உற்சவம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் தைமாதத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு தைமாத சீர் வழங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். இதற்காக சமயபுரம் மாரியம்மன் பல்லக்கில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் வட காவிரியில் தீர்த்த வாரி கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து இரவு அம்மனுக்கு பட்டுபுடவைகள், மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழங்கள் கரும்பு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் உள்ளடக்கிய சீர் ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பட்டாச்சாரியார்கள் குழுவினரால் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து கோவிலில் இருந்து மேளதாளம் மற்றும் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்து சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் திருக்கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் சார்பில் வழங்கப்பட்ட சீர் வரிசைகளை அணிந்து சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த பெரும் திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி முழக்கங்களுடன் அம்மனை வழிபட்டனர்.

First published:

Tags: Local News, Srirangam, Trichy