ஹோம் /திருச்சி /

வைகுண்ட ஏகாதசி விழா.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்.

வைகுண்ட ஏகாதசி விழா.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில்.

X
ஸ்ரீ

ஸ்ரீ ரங்கம்

Trichy News : ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.

பொதுவாக பெருமாள் கோவில்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும். ஆனால் ஸ்ரீரங்கத்தில் இவ்விழா 20 நாள் விழாவாக நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்புள்ள 10 நாட்கள் பகல் பத்து என்றும், வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்கள் இராபத்து என்றும் அழைப்படுகிறது.

இந்த விழாவையொட்டி ரங்கநாதர் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.  மேலும் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

First published:

Tags: Local News, Srirangam, Tamil News, Trichy