முகப்பு /திருச்சி /

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்..

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்..

X
திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

Srirangam Aranganatha Swami Temple Chariot Festival 2023 | திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழாவில் முத்துகொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் வருடம்தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக பார்க்கப்படுகிறது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தை மாதம் புனர்பூச திருத்தேர், பங்குனி கோரதம் என வேறு தேரோட்ட வைபவங்கள் நடைபெற்றாலும் பட்டிதொட்டிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது.

இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நம்பெருமாள் திருக்கோவிலை வளம் வந்தார். மேலும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், இந்த விழாவில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் , பெரம்பலூர், அரியலூர் இதஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவரங்கனின் தேரை காண குவிந்தனர். மேலும், “ரங்க ராஜா -ரங்க பிரபு கோவிந்தா” என்கிற கோஷம் முழங்க எழில்மிகு தேரில் பவனி வந்தார் திருவரங்கன். சரியாக 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில் சுமார் 700க்கும் அதிகமான காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    First published:

    Tags: Local News, Trichy