முகப்பு /திருச்சி /

செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், சுகப்பிரசவத்திற்காகவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவில்!

செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், சுகப்பிரசவத்திற்காகவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவில்!

குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர்

குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர்

Trichy District | செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், திருமணத்தடை அகலவும், சுகப்பிரசவம் ஏற்படவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவிலாக பக்தர்களால், போற்றப்படுகிறது குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் இந்த கோவிலைப் பறியும், அதன் சிறப்புகளையும் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் உறையூரில் அமைந்துள்ள சிறப்வு வாய்ந்த கோவில்கள் பலவற்றுள் அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த கோவில், திருச்சி-உறையூர் சாலையில், உறையூரின் மத்தியில் இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

இந்த கோவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பான கோயில் என்று போற்றப்பட்டு வருகிறது. இந்த கோயில் 1,800 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்றும் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் கல்வெட்டுகள் இந்த ஆலயத்தின் பெருமைகளைச் எடுத்துரைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முற்காலச் சோழ மன்னன் சூர ஆதித்த சோழனின் மனைவி காந்திமதி. நாகர் குல இளவரசியான இவருக்கு திருச்சி தாயுமான சுவாமியின் மீது அதீத பக்தி. அவரை தரிசிக்காமல் இந்த பெண் ஒருநாளையும் களித்ததில்லை. இந்நிலையில் காந்திமதி கர்ப்பம் தரித்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஒருநாள் தாயுமான சுவாமியை தரிசிக்க சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல் சுவாமியின் நந்தவனமான செவ்வந்தித் தோட்டத்திலேயே சோர்வடைந்து நடக்க முடியாமல் மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது, ஈசனைப் தரிசிக்க முடியாத நிலையை எண்ணிக் கண்ணீர் வடித்தார்.

குங்குமவல்லி

இந்நிலையில் காந்திமதி அமர்ந்திருந்த செவ்வந்தித் தோட்டத்தில் தோன்றிய குரல். “மகளே வருந்தாதே, உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். இனி எப்போதும் உனக்கு துணை இருப்பேன். இன்று மட்டுமல்ல, உனக்கு காட்சி தந்த இடத்தில் லிங்க ரூபமாக தான்தோன்றி ஈசனாக எப்போதும் இருந்து உன்னைப் போன்று கரு கொண்ட தாய் வடிவங்களை எப்போதும் காத்து நிற்பேன்.” என்று உறுதி சொன்னது என்று சொல்லப்படுகிறது.

அவ்வாறு ஈசன் வந்து அமர்ந்த இடத்தில் அம்மையும் ‘குங்குமவல்லி’யாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக மாறினாள். இந்த அன்னை ‘வளைகாப்பு நாயகி’ என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறார். இங்கிருக்கும் கருவறையில் சிவன் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக காட்சியளிக்கிறார். இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்திய அன்னை அழகும் கருணையும் ததும்ப காட்சி தருகிறார்.

தான்தோன்றீஸ்வரர்

காந்திமதி வழிபட்டு குங்குமவல்லி தேவிக்கு வளையல் சார்த்தி அதைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை வளையல் ‘காப்புத் திருவிழா இங்கு நடைபெறுகிறது’. இவ்விழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய 2 தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிக்கின்றனர்.

குங்குமவல்லி தாயார்

அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் பிள்ளைபோறு வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருகின்றனர். அதனைத் தொடர்ந்து, விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை - ஜாதக தோஷம் நீங்கி மனதிற்கு இனிய நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருகின்றனர்.

இந்த திருவிழாவானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாள்களிலும் அம்பிகை வளையல் அலங்காரத்தில் கருணை பொங்க அழகாகக் காட்சி தருவார். பின்னர், பூஜை வழிபாட்டுள் செய்யப்பட்டு, காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படுவது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் இந்த கோவிலில் நடக்கும் இந்த ‘வளையல் விழா’ மிகவும் பிரசித்தி பெற்றது.

Must Read : அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெண்களும், ஆண்களும் திரளாக இந்த கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அனைத்து நாட்களிலும் இங்கு நடப்பதாக சொல்கின்றனர். குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்கு இந்த கோவில் ஒரு முக்கிய தலம் என்று சொல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கோவிலின் தெற்கு பிராகாரத்தில் எழுந்தருளி இருக்கும் தில்லை காளிக்குச் செய்யப்படும் ஹோமம் சிறப்பானது என்கின்றனர் பக்தர்கள். 27 வகை மூலிகைகளுடன் மிளகாய் சேர்த்து செய்யப்படும் ஹோமத்தில் கலந்து கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகுவதுடன் நோய்களும் நிவர்த்தியாகும் என்கின்றனர் பக்தர்கள். பொதுவாக சிவன் கோவிலில் இருக்கும் அனைத்து தெய்வங்களின் சந்நிதியும் இங்கு கண்டு தரிசிக்கலாம். மேலும் இங்கு வந்து வணங்கினால், செவ்வாய் தோஷம், நாக தோஷம் பேன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் நவகிரகங்கள் தங்கள் துணையுடன் காட்சி தருவது கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Temple, Trichy