ஹோம் /திருச்சி /

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், கோரிக்கைகள் - திருச்சியில் நாளை சிறப்பு முகாம்

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், கோரிக்கைகள் - திருச்சியில் நாளை சிறப்பு முகாம்

குறை தீர்க்கும் கூட்டம்

குறை தீர்க்கும் கூட்டம்

Trichy District | திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி கிழக்கு-கல்லுக்குழி 1, திருச்சி மேற்கு-வண்ணாரப்பேட்டை 1, திருவெறும்பூர்-வேங்கூர், ஸ்ரீரங்கம்- நாச்சிக்குறிச்சி, மணப்பாறை- கல்பட்டி, மருங்காபுரி- சொக்கம்பட்டி, லால்குடி- கண்ணாக்குடி, மண்ணச்சநல்லூர்- செங்குடி, முசிறி- காலேஜ்ரோடு, துறையூர்- புதிய ஹவுசிங் யூனிட், தொட்டியம்- மணல்மேடு.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்

எனவே பொதுமக்கள் பொது வினியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளான ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்து பயன்பெறலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Ration card, Trichy