முகப்பு /திருச்சி /

சட்டையில் கேமரா.. குற்றங்களை தடுக்க திருச்சி காவல்துறைக்கு நவீன கேட்ஜெட்ஸ்..

சட்டையில் கேமரா.. குற்றங்களை தடுக்க திருச்சி காவல்துறைக்கு நவீன கேட்ஜெட்ஸ்..

X
சட்டையின்

சட்டையின் முன்பக்கத்தில் பிரத்யேக கேமரா

Trichy Police : சட்டையின் முன்பக்கத்தில் அணியும் பிரத்யேக கேமரா திருச்சி காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை சரியான ஆதாரத்துடன் அவர்கள் மீது வழக்கு தொடரவும் காவல்துறை ரோந்து வாகனம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு சட்டையின் முன்பக்கத்தில் பொருத்தி கொள்ளும் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மன்னார்புரம் சிக்னல் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா கலந்துகொண்டு மாநகர மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு கேமராவை வழங்கினார்.

சட்டையின் முன்பக்கத்தில் பிரத்யேக கேமரா

இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் கூறுகையில், “இதுவரை திருச்சி மாநகரில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்ற 52 மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் வரும் பட்சத்தில் நடவடிக்கை தொடரும். சட்டத்திற்கு புறம்பாக தவறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Trichy