முகப்பு /திருச்சி /

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா - சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா - சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

வயலூர் முருகன் கோவில்

வயலூர் முருகன் கோவில்

Vayalur Murugan Temple | திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு பேருந்துகளும் இயக்கவுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான விழா வருகிற 4ஆம் தேதி (சனிக் கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

இந்த தைப்பூச திருவிழாவை ஒட்டி பக்தர்கள் முருகனுக்கு பால்குடம், தீர்த்தகுடம், காவடி மற்றும் அலகு குதி நேர்த்திக்கடன் செலுத்துவர். இதை ஒட்டி, 4ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1 மணி அளவில் முருகப்பெருமான், கோவிலில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் உய்யகொண்டான் ஆற்றுக்கு செல்கிறார்.

அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதன் பிறகு அங்குள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அன்று இரவு 8.30 மணியளவில் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக சோமரசம்பேட்டை அருகே உள்ள வரகந்திடலுக்கு 10 மணிக்கு சென்றடைகிறார்.

அங்கு மண்டகபடியை ஏற்றுகொண்டு இரவு 11 மணியளவில் கீழவயலூர் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிகிறார், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடகாபுத்தூர் வந்தடையும் முருகன் அங்கு இரவு தங்குகிறார்.

பின்னர் 5ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) காலை 8.30 மணி அளவில் வடக்காபுத்தூரில் இருந்து புறப்படுகிறார். வழிநெடுக்கிலும் பக்தர்களுக்கு அருள்பலிக்கின்றார். காலை 10.30 மணியளவில் சோமரசம்பேட்டை வந்தடையும் முருகன் அங்கு சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், உய்யகொண்டான் திருமலை உஜ்ஜிவநாதர், அல்லித்துறை பார்வதி ஈஸ்வரர், சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் ஆகிய தெய்வங்களை சந்திக்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து, முருகப்பெருமான் சோமரசம்பேட்டை நான்கு வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதேபோல் பிற தெய்வங்களம் இரவு 7 மணி வரை அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதன் பின்னர் அனைத்து சாமிகளும் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Must Read : திருநெல்வேலி பகுதியில் உள்ள சிறப்புவாய்ந்த நவகைலாய கோவில்கள் பற்றி தெரியுமா?

அதன்படி, சோமரசம்பேட்டையில் இருந்து புறப்படும் முருகன் அல்லித்துறை மற்றும் அதவத்தூரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து அன்று இரவு அதவத்தூரில் தங்குகிறார். மறுநாள் 6ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வந்தடைகிறார்.இந்த தைப்பூச விழாவையொட்டி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

First published:

Tags: Local News, Murugan, Thaipusam, Trichy