திருச்சியில் 267 ரயில்வே குடியிருப்புகள் இடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமீபத்தில், கோட்ட அதிகாரிகள் மூலம் பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அறிக்கை அடிப்படையில், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் பாழடைந்த ரயில்வே குடியிருப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக இடிக்கப்படும். அதன்படி திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் வரம்பிற்குட்பட்ட இதுபோன்ற பல குடியிருப்புகள் கல்லுக்குழி, திருச்சி கோட்டை, திருச்சி குட்ஷெட் யார்டு மற்றும் பொன்மலை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இவை 90 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதாலும், இதுபோன்ற பாழடைந்த குடியிருப்புகளில் முதலீடு செய்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததாலும், திருச்சிராப்பள்ளி கோட்டம் அவற்றை இடிக்க அடையாளம் கண்டுள்ளது. அதன்படி, பொன்மலை தெற்கு ‘டி’ (500), வடக்கு ‘டி’ (206) காலனிகளில் உள்ள 706 குடியிருப்புகளை இடிக்க, வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி பணி தொடங்கும். தொடர்ந்து, கல்லுக்குழி, திருச்சி குட்ஷெட் யார்டு, திருச்சி கோட்டை ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு மொத்தம் 267 குடியிருப்புகள் கண்டறியப்பட்டன.
எனவே, விரைவில் அதனை இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். பாழடைந்த குடியிருப்புகளை இடிப்பதன் மூலம் கைவிடப்பட்ட குடியிருப்பு வளாகத்தை சுற்றியுள்ள காட்டு செடிகள் மற்றும் புதர்களின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாமல், அப்பகுதியில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். தேவையைப் பொறுத்து, திருச்சிராப்பள்ளி கோட்டம், இடிக்கப்பட்ட பகுதியை எதிர்கால வளர்ச்சிக்காக பரிசீலிக்கும்” என தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Southern railway, Trichy