முகப்பு /செய்தி /திருச்சி / ஓய்வூதியத்தை தர மறுத்த தந்தை... ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற மகன்! - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்..

ஓய்வூதியத்தை தர மறுத்த தந்தை... ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற மகன்! - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்..

உயிரிழந்தவர்

உயிரிழந்தவர்

Crime News : திருச்சியில் 2 மனைவிகளை திருமணம் செய்திருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் அவரது ஓய்வூதிய தொகை தகராறு காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கலியபெருமாள்(60). மாநகராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சுசீலா, இவரது மகனுடன் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் வசித்து வருகிறார். சுசீலாவும் தூய்மை பணியாளராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் கலியபெருமாள் ஓய்வுப் பெற உள்ள நிலையில் அவருடைய செட்டில்மெண்ட் பணத்தை முழுமையாக தங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல் மனைவி சுசீலாவும், அவருடைய மகன் குமாரும் கலியபெருமாளிடம் கேட்டுள்ளனர். அதற்கு கலியபெருமாள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இதனால், முதல் மனைவி சுசீலா வீட்டிற்கு செல்வதை தவிர்த்த கலியபெருமாள், தனது 2வது மனைவி பாப்பம்மாள் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல், இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் கலியபெருமாள் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த 2 நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதையும் படிங்க : மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துட்டேன், ஆனா... - உடல்நிலை குறித்து பதிவிட்ட குஷ்பு

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, கலியபெருமாள் ஓய்வூதியத் தொகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், முதல் மனைவியின் மகன் குமார் மற்றும் குமாரின் மைத்துனர் பாண்டியன் ஆகியோர் கலியபெருமாளை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

top videos

    இதையடுத்து, தலைமறைவான அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் முயன்றபோது, இருவரும் 'தங்களுக்கு நெஞ்சுவலி' என்று கூறி மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளது தெரியவந்தது. அவர்களை முறைப்படி கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொன்மலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை பணியாளர் ஓய்வூதிய தொகையால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Crime News, Local News, Trichy