இந்த அரண்மனையை எங்கோ பார்த்த மாதிரி இருக்கா.. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மூன்று மாடி மாளிகை மிகவும் பரிச்சயமானதாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் நடித்த அரண்மனை கிளியில் இருந்து கார்த்தியின் சுல்தான் வரைக்கும் பல படங்களில் இந்த அரண்மனையை நீங்க பார்த்திருக்கலாம். அரண்மனைக்கிளி, பெரிய மருது, இரணியன், சண்டக்கோழி, சுல்தான், ஈஸ்வரன், கைதி என படங்களின் லிஸ்ட் ரொம்ப பெருசு. கோலிவுட்டில் தோன்றியதில் இருந்தே பொதுமக்களின் ஆர்வத்தை இந்த அரண்மனை தூண்டி வருகிறது.
திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மணப்பாறையில் இருந்து செல்லும் வளைந்த சாலையின் முடிவில் பெரியதாகத் தோன்றும் ஒரு சிறிய அரண்மனையின் அலங்காரமாக செதுக்கப்பட்ட கோடுகளுக்கு கீழே முருக விலாஸ் கடவூர் அடையாளம் மறைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மாளிகை மூன்று மாடிகளைக் கொண்டது.
கடம்பூர் ஜமீன் அரண்மனையின் ஒரு பகுதியில் ஸ்ரீ கருணகிரிப் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். ஆண்டுதோறும் தமிழ் மாசி மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெளிநாடுகளிலும், இந்திய நகரங்களிலும் வசிக்கும் கடவூர்வாசிகள் பலர் விழாக்களில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Shootin spot, Trichy