Home /trichy /

நம்ம திருச்சில யானைகள் மறுவாழ்வு மையம்... ஷவரில் ஜாலி குளியல் போடும் யானைகள்..

நம்ம திருச்சில யானைகள் மறுவாழ்வு மையம்... ஷவரில் ஜாலி குளியல் போடும் யானைகள்..

திருச்சி

திருச்சி - யானைகள் மறுவாழ்வு மையம்..

Trichy Elephants Rehabilitation Centre | தமிழகத்தில் பல்வேறு  மாவட்டங்களில் கைவிடப்பட்ட யானைகளை மீட்டு திருச்சி சிறுகனூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே காப்புக்காடு உள்ளது. சுமார் 250 ஹக்டேர் பரப்பளவில் உள்ள இந்த வனப்பகுதியில் யானைகளுக்கான மறுவாழ்வு மற்றும் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மறுவாழ்வு மையம்.
காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தனி நபரிடம் இருந்த 7 யானைகளை மீட் டு இந்த வன காப்பக மையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள், திருச்சி மாவட்ட வன அலுவலரின் மேற்பார்வையில் வன சரகர்கள் மற்றும் யானைப் பாகன்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

3 வருடங்களுக்கு முன்பே இந்த மையம் தொடங்கப்பட்ட போதிலும், தனி நபர்களால் கைவிடப்பட்ட மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட யானைகளை இங்கு அழைத்துவந்து பராமரிக்க வேண்டும் என தமிழக வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பிறகே இந்த யானைகள் மறுவாழ்வு மையம் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது.

திருச்சி - சிறுகனூர் யானைகள் மறுவாழ்வு மையம்..


இதையும் படிங்க:  வளரும் நெற்குதிர்கள்?... திருச்சியில் ஓர் அதிசயம்!

2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த மையம், யானைகள் தங்களுடைய மன அழுத்தங்களைப் போக்கிக்கொள்ளத் தேவையான அனைத்து வசதிகளையும் தன்வசம் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கும் தரமான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி - சிறுகனூர் யானைகள் மறுவாழ்வு மையம்..


இங்கு தஞ்சமடையும் யானைகளுக்கு இயற்கையான சூழலில், சிறந்த சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் இந்த யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்திருப்பது சிகிச்சை அளிப்பதற்கும் சாதகமான அம்சமாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் யானைகளுக்கென தீவன தோட்டம், சவர் குளியல் , குடிநீர் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது யானைகளுக்கு வனப்பகுதியில் நடை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி