Union
Budget 2023

Highlights

ஹோம் /திருச்சி /

பட்டா மாற்றம் செய்ய எளிய வழிமுறை - திருச்சி கலெக்டர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பட்டா மாற்றம் செய்ய எளிய வழிமுறை - திருச்சி கலெக்டர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பட்டா மாறுதல்

பட்டா மாறுதல்

Trichy District | எங்கிருந்தும், எந்நேரத்திலும் பட்டா மாற்றம் செய்யலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

எளிமையாக பட்டா மாற்றம் செய்யும் வழிமுறை குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை மற்றொருவருக்கு கிரையம் முடித்து பத்திரம் பதிவு செய்தாலும், அந்த சொத்தின் பட்டாவில் இருக்கும் பெயரை மாற்ற கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய இருப்பதால், நேர விரயம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது.

இந்நிலையில், பட்டா மாற்றம் தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே 'எங்கிருந்தும், எந்நேரத்திலும்' இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பட்டா மாறுதலின் ஒவ்வொரு நிலையும் மனுதாரருக்கு 'குறுஞ்செய்தி் வாயிலாக தெரிவிக்கப்படும்.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்

பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், பொதுமக்கள், பட்டா மாறுதல் உத்தரவு நகல், பட்டா, சிட்டா, புலப்படம், அ-பதிவேடு ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Patta, Trichy