ஹோம் /திருச்சி /

திருச்சி கருமண்டபத்தில் சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி..!

திருச்சி கருமண்டபத்தில் சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி..!

X
கண்காட்சியில்

கண்காட்சியில் பார்வையிட்ட மாணவர்கள்.

Trichy siddha exhibition | சித்தர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் சித்தர் மூலிகை கண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியில் நேற்று சித்தர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி நடைபெற்றது.

ஆயுஷ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று சித்த மருத்துவத்தின் தந்தை, மாமுனிவர் அகத்தியரின் பிறந்தநாளை சித்தர் தினமாக அனுசரித்து வருகிறது.

இந்த ஆண்டு "ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்ற தலைப்பில் 6வது சித்தர் தினக் கொண்டாட்டத்தை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் & ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நேற்று நடத்தியது.

இதில் 200க்கும் மேற்பட்ட மருத்துவம் குணம் நிறைந்த மூலிகை மற்றும் செடிகள் காட்சிக்காக அமைக்கப்பட்டது. இதை ஏராளமான சித்த மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

First published:

Tags: Local News, Trichy