Home /trichy /

நீங்க ஷாப்பிங் பிரியரா? திருச்சியில் ஒரு தி.நகர்.. A - Z அனைத்து வகை பொருட்களும் கம்மி விலையில் வாங்கலாம்...

நீங்க ஷாப்பிங் பிரியரா? திருச்சியில் ஒரு தி.நகர்.. A - Z அனைத்து வகை பொருட்களும் கம்மி விலையில் வாங்கலாம்...

திருச்சி

திருச்சி - ஷாப்பிங் பகுதிகள்

Trichy shopping Areas : திருச்சி என் எஸ் பி ரோட்டில் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருட்களும் குறைந்த விலையில் வாங்கி மகிழலாம். இது சென்னை தி.நகருக்கு சமமான ஒரு இடம் என கூறுகிறார்கள்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சியில்  திரும்பிய பக்கமெல்லாம்  கோவில்கள், சுற்றுலா தலங்கள் என பல்வேறு சிறப்பு விஷயங்கள் இருந்தாலும் உள்ளூர் வாசிகளின் வணிக பகுதியாக திகழும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலைக்கு தனி சிறப்பு இடம் உள்ளது. திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, அக்கம்பக்கத்துக்கு  மாவட்ட மக்களுக்கும் இந்த  என்.எஸ்.பி சாலை மிக முக்கியமான ஒன்றாகும்.

சென்னையில் தியாகராய நகர் எப்படியோ அதே போல தான் நம்ம திருச்சி மக்களுக்கு என். எஸ்.பி‌.ரோடு.

திருச்சி என். எஸ்.பி‌.ரோடு.


சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, என்.எஸ்.பி ரோட்டில் கிடைக்காத விஷயங்களே கிடையாது, தங்கம், வைரம், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள், பிளாஸ்டிக் சாமான்கள், ஆடைகள், பிற ஜவுளி ரகங்கள், மருந்துகள், இதர மளிகை காய்கறி, கனி வகைகள், சாப்பாடு, டிபன், காஃபி, கூல் டிரிங்ஸ், ஐஸ்க்ரீம், பாய், படுக்கை, தலையணை, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்கள் என லிஸ்ட் போட முடியாத அளவுக்கு அனைத்து வகையான பொருட்களும் இங்கு கிடைக்கும்.

திருச்சி என். எஸ்.பி‌.ரோடு.


குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாக விளங்குகிறது.

திருச்சி என். எஸ்.பி‌.ரோடு.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சும்மா கொஞ்ச தூரம் நடந்து போனா போதும், என்.எஸ்.பி ரோடு வந்துரும். என் எஸ் பி ரோடு உள்ள நுழைந்தவுடன் கடை வாசல்கள் வழியாக ஜில்லுனு  ஏசி காத்து வரும் அது நமக்கு ஒரு உற்சாகத்தை தரும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நம்ம என் எஸ் பி ரோட்டுக்கு திருச்சி மட்டுமில்ல பல மாவட்டங்களில் இருந்து ஜவுளி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களை வாங்குவதற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகிறார்கள்.. திருச்சி நகரின் அழகையும், இம்மக்களின் அன்பையும், திருச்சி வட்டார பேச்சு வழக்கையும்   ரசித்தவாறு ஷாப்பிங் செய்வது ஒரு தனி அனுபவமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி