ஹோம் /திருச்சி /

திருச்சியில் மாநில கபடி போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு

திருச்சியில் மாநில கபடி போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சியில், நாளை மாநில கபடி போட்டிக்கு மாவட்ட வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவினருக்கு மாநில அளவிலான 48வது ஜூனியர் கபடி போட்டி தமிழ்நாடு அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.

  இதையொட்டி, இப்போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரர்களை தோ்வு செய்வதற்கான முகாம் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறுகிறது.

  இதில் பங்கேற்க தகுதி 20.11.2002 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். 70 கிலோ எடை பிரிவு உள்ளராக இருக்கவேண்டும். வரும் போது, ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டு வரவேண்டும்.

  மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தை 9524676767 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 10 மணிக்குள் வராத வீரர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Trichy