ஹோம் /திருச்சி /

மாநில அளவிலான நடனப்போட்டியில் பங்கேற்க திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பள்ளி மாணவர்கள்

மாநில அளவிலான நடனப்போட்டியில் பங்கேற்க திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பள்ளி மாணவர்கள்

X
திருச்சி

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பள்ளி மாணவர்கள்

Trichy District News : மாநில அளவில் நடைபெறும் நடனப்போட்டியில் பங்கேற்க திருச்சி ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்ட தஞ்சை மாணவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலை திருவிழா நிகழ்ச்சியை கடந்த மாதம் முழுவதும் நடத்தியது. இந்த கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோட்டை மேல காலனி பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 8 பேர் பொது நடனத்தில் பங்கேற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 50 நடன குழுக்கள் பங்கேற்றனர். இதில் தஞ்சை திருமங்கலக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.

இதையும் படிங்க : விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்

இதையடுத்து மாநில அளவில் நாளை கோவையில் நடைபெற உள்ள நடன போட்டியில் பங்கேற்பதற்காக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பயிற்சியாளர் மற்றும் 8 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி 

First published:

Tags: Local News, Trichy