ஹோம் /திருச்சி /

திருச்சி மாநகரத்தின் முதல் பெண் காவல் ஆணையராக சத்திய பிரியா ஐபிஎஸ் பொறுப்பேற்பு..!

திருச்சி மாநகரத்தின் முதல் பெண் காவல் ஆணையராக சத்திய பிரியா ஐபிஎஸ் பொறுப்பேற்பு..!

X
திருச்சி

திருச்சி காவல் ஆணையர் சத்திய பிரியா

Satya Priya IPS : திருச்சி மாநகரத்தின் 32வது ஆணையராகவும் முதல் பெண் ஆணையராகவும் சத்திய பிரியா ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐஜியாக பணியாற்றிய சத்திய பிரியா திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்களாக ஏற்கனவே 31 ஆணையர்கள் பணியாற்றிய நிலையில், திருச்சி மாநகரத்தின் 32வது ஆணையராகவும், முதல் பெண் ஆணையராகவும் சத்திய பிரியா ஐபிஎஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.திருச்சி மாநகரத்திற்கு முதல் பெண் ஆணையர் என்ற பெருமையை சத்திய பிரியா ஐபிஎஸ் பெற்றுள்ளார். இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா கூறுகையில், “திருச்சி மாநகரத்தில் கஞ்சா புழக்கத்தை முழுமையாக ஒலிக்கவும், ரவுடிசத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக கஞ்சா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளை ஒழிப்பதற்கு பல புதிய திட்டங்களை வைத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திருச்சி மாநகர துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அப்போர் அவர் பேசுகையில், “நீங்கள் தற்போது செய்து வரக்கூடிய பணிகளை வெறுப்பு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றுங்கள். எந்த பிரச்சனைகள் தொடர்பாகவும் நீங்கள் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம். அதேபோல் மாநகரில் ஏற்படக்கூடிய ரவுடிசம், கஞ்சா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுங்கள்.

முடிந்தவரை காவல் நிலையங்களில் வரக்கூடிய மனுக்களை முறையாக பெற்று அதனை விசாரித்தால் பல பிரச்சனைகள் தீரும்” என அறிவுரை வழங்கினார். மேலும், கடந்த ஆண்டு 188 குண்டாஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து குற்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு அதை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை.. நகைகள் கொள்ளை.. திருச்சியில் பகீர் சம்பவம்

மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அவற்றின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கக்கூடிய இளைஞர்களை திருத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்த உள்ளதாகவும். அதேபோல் மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது அவற்றை தடுப்பதற்கு அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்படும் என்றும், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Trichy