ஹோம் /திருச்சி /

இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்.. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அரங்கேறும் அவலம் - பக்தர்கள் புகார்..

இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்.. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அரங்கேறும் அவலம் - பக்தர்கள் புகார்..

திருச்சி

திருச்சி சமயபுரம் கோவிலில்

Samayapuram Mariamman Temple | திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை போடுவதற்கு பக்தர்களிடம் கட்டணம் வசூல் என பக்தர்கள் புகார்.. 

அநீதிகளையும், தீமைகளையும் அழித்து, தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பரிகார தலமாக திகழ்கிறது திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் பிரதானமாக திகழும் இத்திருக்கோயில், காவிரியின் வடகரையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் தினசரி அம்மனை தரிசிக்க வருவதுண்டு. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

இக்கோவிலில் ஒரு வாரத்துக்கு சுமார் 10,000 பேர் மொட்டை போட்டுக்கொண்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதாக கோவில் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது விலக்கிக்கொள்ளப்பட்டது. மொட்டை போடுவதற்கு பக்தர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக்கூடாது..

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

முடி காணிக்கை வேண்டுதலை நிறைவேற்ற வரும் பக்தர்களிடம், மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலித்துக்கொண்டு தான் மொட்டை அடிக்கின்றனர் என்கின்றனர் பக்தர்கள்.

இதுதவிர, அடிப்படை வசதிகளும் இங்கு போதுமான அளவில் இல்லை என்கின்றனர் பக்தர்கள், பெண்கள் மொட்டை அடித்து குளிக்கும் இடத்தில் கதவு இல்லாமல் உள்ளது . இது பெண் பக்தர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இந்த விஷயத்தில் தலையிட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy