திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் நியு வெம்புலி சலூன் என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வருகிறார் பெட்ரிஷியா மேரி. இவருக்குதிருமணமாகி 14 வருடங்கள் கடந்துவிட்டன. திருமணத்திற்கு முன்பே டெய்லரிங் படித்திருந்த பெட்ரிஷியா மேரி, வீட்டில் சுயதொழிலாக தையல் வேலையும் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கணவர் ரூபன் சண்முகம், விபத்து ஒன்றில் காலமாகிவிட, கணவர் நடத்தி வந்த சலூன் கடையை கைவிட மனமில்லாமல், கணவர் விட்டுச்சென்ற முடி வெட்டும் தொழிலை தொடங்கினார். இந்த தொழிலை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் 10 வருடங்களாக நடத்தி வருகிறார் பெட்ரிஷியா மேரி.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது கணவர் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு நான் இந்த தொழிலை ஆரம்பித்து 10 வருடம் கடந்த போதும் கலங்காமல் தற்போதும் இந்தத் தொழிலை செய்து வருகிறேன். முதலில் ஆண்கள் இங்கு முடிவெட்ட வரும்போது, என்னை பார்த்ததும் வெட்கப்பட்டு திரும்பி சென்றுவிடுவார்கள். அதன்பிறகு குழந்தைகள் பெரியவர்கள் என முடிவெட்ட தொடங்கினார்கள். தற்போது அனைத்து தரப்பினருமே இங்கு வந்து மகிழ்ச்சியாக முடிவெட்டி செல்கின்றன.
அவமானம் - எதிர்ப்பு
பெரும்பாலும் பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, காத்திருந்து முடிவெட்டி செல்கின்ற நிகழ்வு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் இந்த தொழிலை செய்யக்கூடாது என பல்வேறு எதிர்ப்புகளும் அவமானங்களும் நேரிட்டபோதும், எனது குடும்ப வறுமை நீங்கவும் பிள்ளைகளை படிக்க வைக்கவும் இந்த தொழில் கைகொடுத்து இருக்கின்றது எனபதால், எதிர்ப்புகளை அத்தனை எதிர்ப்புகளையும் வென்று தொழில் செய்து வருகிறேன்.
மேலும், இந்த பெண்கள் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் தனது வாழ்த்துக்கள் கூறிய பெட்ரிஷியா மேரி, பெண்கள் எடுத்தவுடன் சாதித்துவிட முடியாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் எனக் கூறினார் புன்னகையோடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: International Women's Day, Local News, Trichy, Women's Day