திருச்சியில் உள்ள பள்ளி - கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (திருச்சி மண்டலம்) அதிகாரிகள் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பேருந்து, திருச்சியில் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அந்த பேருந்தில், உயிரிழப்புகளை தடுத்து, விபத்துக்கள் இல்லாமல் பயணிப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், சிக்னல் சொல்லும் வழிகாட்டுதல்கள், கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்டவை குறும்படமாக காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பார்வையிட்டு, சாலை விதிகளை கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து இருவர் மட்டுமே செல்ல வேண்டும். கார்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. சாலையை கடக்கும்போது இரு திசைகளையும் பார்த்து கவனமாக கடக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல்களின் உத்தரவுகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை மாணவர்களுக்கு, போக்குவரத்து கழக அதிகாரிகள் பாடமாக நடத்தினர்.
இந்நிகழ்வில் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் சதீஸ்குமார்(வணிகம்), போக்குவரத்துக் கழக துணை மேலாளர் சாமிநாதன் (தொழில்நுட்பம் & பயிற்சி), உதவிப் பொறியாளர் ஹரித், செல்வம், ஓட்டுநர் போதகர் ரமேஷ், ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy