முகப்பு /திருச்சி /

திருச்சி பேருந்து நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி சாலை மறியல் போராட்டம்

திருச்சி பேருந்து நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி சாலை மறியல் போராட்டம்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஏஐடியுசி

Trichy | திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் வேண்டும், எந்த தொழிலில் பணிபுரிந்தாலும் ரூபாய் 21,000 குறையாத மாத ஊதியம் வழங்க வேண்டும், நல வாரியங்களில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யு.சி தேசிய செயலாளர் வகிதா நிஜாம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

First published:

Tags: Local News, Trichy