ஹோம் /திருச்சி /

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகரிக்கும் தண்ணீர் வரத்து - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகரிக்கும் தண்ணீர் வரத்து - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

திருச்சி முக்கொம்பு

திருச்சி முக்கொம்பு மேலணை

Trichy Mukkombu Dam | கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 784 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

கர்நாடக மாநிலத்தில்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் மீண்டும் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு வந்த உபரிநீர் முழுவதும் தற்போது காவிரியில் திறந்து விடப்படுகிறது. இடையில் பவானி ஆறு, அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரும் கரூர் மாவட்டம்   மாயனூர் கதவணைக்கு வந்தது.மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 784 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கதவணையில் இருந்து பிரியும் 4 பாசன வாய்க்கால்களில் 920 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் 40 ஆயிரம் கன அடியும், காவிரியில் 73 ஆயிரம் கன அடியும் வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் மிகவும் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். முக்கொம்பு, காவிரி பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy