Home /trichy /

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 12-ம் தேதி பத்திர பதிவு துறை கருத்து கேட்பு கூட்டம்

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 12-ம் தேதி பத்திர பதிவு துறை கருத்து கேட்பு கூட்டம்

திருச்சி ஆட்சியர் அலுவலகம்

திருச்சி ஆட்சியர் அலுவலகம்

திருச்சி மாவட்ட எல்லைக்குள் பத்திரவு பதிவு துறை, வருவாய், கிராம நிர்வாகங்களை இணைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் வரும் 12ம் தேதி திருச்சி ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.

    திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள லால்குடி, புள்ளம்பாடி, துறையூா் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 4 சாா் பதிவகங்கள் இருக்கின்றன. இவற்றை திருச்சி பதிவு வருவாய் மாவட்ட எல்லையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து துணைப்பதிவுத் துறைத்தலைவா் அலுவலகம், திருச்சிச் மாவட்ட பதிவாளா் அலுவலகம், திருச்சி சாா்பதிவாளா் அலுவலகம், வட்டாசியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பாா்வைக்காக அறிவிப்பு செய்யபட்டுள்ளது.

    வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 12ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில், பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி