ஹோம் /திருச்சி /

திருச்சியில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு - 16 மாவட்டங்களைச் சேந்த ஆண்-பெண் பங்கேற்கலாம்

திருச்சியில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு - 16 மாவட்டங்களைச் சேந்த ஆண்-பெண் பங்கேற்கலாம்

அக்னி வீரர்கள்

அக்னி வீரர்கள்

Trichy District | திருச்சியில் வரும் 13ஆம் தேதி அக்னிபாத் (ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு ) முகாம் நடக்கிறது. இதில், 16 மாவட்டங்களை சேர்ந்த ஆண் பெண்கள் பங்கேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் வரும் 13ஆம் தேதி அக்னிபாத் (ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு ) முகாம் நடக்கிறது. இதில் தமிழகத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி மண்டல ராணுவ ஆள் சேர்ப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவை செய்யும் ‘அக்னி பாத்’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞா்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம். இப்பணிகளில் சேருவோா் அக்னி வீரா்கள் என்று அழைக்கப்படுவா்.

இந்தத் திட்டம் ராணுவத்தில் ஒரு புரட்சியாகும். இளைஞா்கஞா்ளுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும். இந்தத் திட்டத்தால் ராணுவத்தில் இளைஞா்களின் பங்களிப்பு அதிகமாகும். அக்னி வீரர்களாக ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும்.

பிறகு வீரா்களின் பங்களிப்பு தொகை ரூ. 5.02 லட்சம், அரசு அளிக்கும் அதே தொகை மற்றும் வட்டியுடன் சோ்த்து ரூ. 11.71 லட்சம் வழங்கப்படும். இத் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பணிக் காலத்தில் ரூ. 48 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படும்.

Must Read : கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

இந்த ஆண்டில் 40,000 பேருக்கு ராணுவத்தில் வேலை தரப்படுகிறது. இத் திட்டத்தின்படி தமிழகத்தில் ஆள் சோ்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன. திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை , திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை , ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சோ்ந்த இளைஞா்களும் பங்கேற்கலாம்.

இதற்கான நுழைவுத் தோ்வு, திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள தேசிய கல்லூரியில் வரும் 13ம் தேதி நடக்கிறது. அக்னி வீரா் டெக்னிக்கல், அக்னி வீரா் கிளாா்க், ஸ்டோா் கீப்பா், அக்னி வீரா் ஜெனரல் பணி மற்றும் டிரேட்ஸ்ட் மேன் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விருப்பமும், தகுதியும் உடைய இளைஞா்கள் வரும் 13ஆம் தேதி காலை 4 மணிக்கு முன்னதாக தகவல் தெரிவித்துப் பங்கேற்கலாம். அதன்டிப, பங்கேற்க விரும்பும் அனைத்து இளைஞா்களுக்கும் அதிகாலை 4 மணிக்கு திருச்சி தேசியக் கல்லூரி மைதானத்தில் ஆஜராகியிருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Indian army, Local News, Trichy