"கலைஞர் கருணாநிதிக்கு 'கல்லக்குடி கொண்டான்' என்ற பெயர் வருவதற்கு காரணம் என்ன?" என்பது குறித்து அமைச்சர் நேரு கனிமொழியிடம் விளக்கிய சுவாரசிய நிகழ்வு, திருச்சியில் அரங்கேறி உள்ளது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கோவண்டாகுறிச்சியில், 'Banyan' என்கிற தன்னார்வ அமைப்பின், மனநலம் மற்றும் சமூக பராமரிப்பு மையத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடந்த விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசிய போது, "திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி ஒன்றியம் என்பது கடந்த, 1989ம் ஆண்டில் இருந்து திமுக வசம் இருக்கிறது. அப்போது நான் இங்கு ஒன்றியத் தலைவராக இருந்தேன்.
கல்லக்குடி கொண்டான்
தொடர்ச்சியாக, 32 ஆண்டுகள் திமுகவிடம் இந்த ஒன்றியம் இருக்கிறது. இடையில், ராஜீவ் காந்தி இறந்தபோது மட்டும் தான் அடுத்தவர்கள் வசம் சென்றது. இந்த ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் நடத்திய போராட்டத்தின் காரணமாக தான் 'கல்லக்குடி கொண்டான்' என்ற பெயரை கலைஞர் கருணாநிதி பெற்றார்.
தமிழகத்தில் சமத்துவபுரங்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணிய போது, புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் தான் சமத்துவபுரம் அமைக்க வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டார். அதற்குரிய இடத்தை அவரே நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது, இரண்டு மணி நேரம் அங்கேயே அமர்ந்து, தனது இளமைக் கால போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.
மேலும் படிக்க : 6 மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரில் மிதந்து உலக சாதனை.. தேனி சிறுமி அசத்தல்!
இத்தகைய சிறப்புமிக்க புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு, கருணாநிதிக்கு பிறகு தலைவர்கள் யாரும் வருவதே இல்லை. தற்போது கனிமொழி வந்திருக்கிறார். இவர் இங்கு வந்திருப்பது இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது" என்றார்.
கனிமொழி பதில்:
அவரை தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, "அமைச்சர் நேரு புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு தலைவர்கள் யாரும் வரவில்லை என்று கூறினார். என்னை எப்போது, எங்கு அழைத்தாலும் நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.