ஹோம் /திருச்சி /

”கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்” - திருச்சி விவசாயிகள் கோரிக்கை..

”கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்” - திருச்சி விவசாயிகள் கோரிக்கை..

X
தமிழக

தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த திருச்சி விவசாயிகள்

Trichy District News : அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்புகள் விவசாயம் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

பொங்கல் பண்டிகையில் இன்றியமையாதது கரும்பு. கரும்பை தோரணமாக்கி, நடுவில் பொங்கல் பானை வைத்து பொங்கி வரும் பொங்கலும், தோரணமாக இருக்கும் கரும்பும் திகட்டாத இனிப்பை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை கவனத்தில் கொண்ட தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு வழங்கியது.

இந்த கரும்பானது கூட்டுறவு சங்கங்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த பகுதி மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அரசு பொங்கல் தொகுப்புக்காக கரும்புகளை கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவளர்சோலை பகுதியில் பல நூறு ஏக்கர் கணக்கில் கரும்பு நடவு செய்யப்பட்டு தற்போது, அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்கு கரும்பு தேவை என்பதால் அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்... திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அலர்ட்

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, “தற்போது கரும்பு நடவு செய்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு எங்களை போன்ற விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்தால் எங்களின் துயர் நீங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த அறிவிப்பும் வராதது வேதனையாக உள்ளது.

மேலும் உரம் போன்ற விஷயங்களில் அதிகமான செலவு இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு கரும்பை எங்களிடம் இருந்து கொள்முதல் செய்திட வேண்டும். இந்த முறை அரசு விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் அரசு கொள்முதல் செய்தாலும் இடை தரகர்கள் குறைந்து விலைக்கு எங்களிடமிருந்து வாங்கி செல்கின்றனர். எனவே நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி

First published:

Tags: Agriculture, Local News, Trichy