ஹோம் /திருச்சி /

திருச்சியில் தொடர் கனமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்...

திருச்சியில் தொடர் கனமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்...

திருச்சியில்

திருச்சியில் தொடர்மழை

Trichy District News | ஏற்கனவே பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக பெரும்பாலான சாலைகள் துண்டாடப்பட்டுள்ள நிலையில் மழையினால் அந்த சாலைகள் சேரும் சக அதிகமாக மாறி உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்தது. இந்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :

லால்குடி- 4.6, நந்தியாறு அணைக்கட்டு -12.6, புள்ளம்பாடி - 10.6, தேவி மங்கலம் -4.2, சமயபுரம் -3, சிறுகுடி -3.8, வாத்தலை அணைக்கட்டு - 5.2, மணப்பாறை -1.2, பொன்னணி ஆறு அணை - 1, முசிறி 2, தாப்பேட்டை ஆறு துவாக்குடி - 10.3, கொப்பம்பட்டி - 1, தென்பரநாடு - 11, துறையூர் - 1, பொன்மலை - 6.4, திருச்சி ஏர்போர்ட் - 4.1, திருச்சி ஜங்ஷன் - 6.4, திருச்சி டவுன் - 6 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 108.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் திருச்சி மாநகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக பெரும்பாலான சாலைகள் துண்டாடப்பட்டுள்ள நிலையில் மழையினால் அந்த சாலைகள் சேரும் சக அதிகமாக மாறி உள்ளன.

இதையும் படிங்க : திருச்சியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... மழையில் நனைந்தபடி தள்ளிய பெண் ஊழியர்!

 இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy